“லிட்டில் சூப்பர்ஸ்டார் பட்டம் இனி வேண்டாம்” – சிம்பு அதிரடி அறிவிப்பு:

நடித்த படம் ஓடுகிறதோ இல்லையோ பல நடிகர்களுக்கு தங்கள் பெயருக்கு முன்னால் பட்டங்கள் மட்டும் கட்டாயம் இருக்கவேண்டும்.. இப்போது அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்று சமூக வலைதளங்களில் கருத்து யுத்தம் நிலவுகின்ற நேரம் இது.

இந்த சூழ்நிலையில் இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு வரும் ஞாயிறு அன்று மதுரையில் அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் சூட்டப்போவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த சூடான வேளையில் தன் பெயருக்கு முன்னால் இனி லிட்டில் சூப்பர்ஸ்டார் பட்டம் உட்பட எந்த அடைமொழிகளும் போட வேண்டாம் என அறிவித்துள்ளார் சிம்பு..

“தேவையில்லாமல் நானே வலிய ஒரு சுமையை சுமந்துகொண்டிருப்ப்பதாக நினைக்கிறேன்.. அதனால் தான் இந்த முடிவு.. ரசிகர்கள் என்னை புரிந்து கொள்வார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்” என கூறியுள்ளார் சிம்பு.. அதே மாதிரி அவர் பெயரும் சிம்புவா, எஸ்.டி.ஆரா, இல்லை சிலம்பரசனா என்பதையும் உறுதியாக் சொல்லிவிட்டால் அந்த குழப்பமும் தீர்ந்து விடும்.