35 வருடங்கள் கழித்து ஒன்று கூடிய டி.ராஜேந்தர் & கோ…

டி.ராஜேந்தர் இயக்கிய ‘ஒரு தலை ராகம்’ படத்தில் ஹீரோவாக நடித்த சங்கர் தற்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களை இயக்கியவர்தான். பாலைவன சொர்க்கமாக கருதப்படும் வளைகுடா நாடான துபாயில் முழுக்க முழுக்க உருவாகியுள்ளது ‘மணல் நகரம்’.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தன்னுடன் ஒருதலை ராகம் படத்தில் நடித்த படக்குழுவினரை அழைத்து வந்து, நம்மை 35 வருடங்களுக்கு பின்னோக்கி அழைத்துச் சென்றுவிட்டார் இயக்குனர் சங்கர்.

ஒருதலை ராகம் பட கதாநாயகி ரூபா ஹைதராபாத்தில் இருந்தும் அதில் தும்பு கேரக்டரில் நடித்திருந்த கைலாஷ் திருவனந்தபுரத்திளிருந்தும் வந்திருந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்கள். மேலும் நடிகர் தியாகு, ஒளிப்பதிவாளரும் நடிகருமான (ராபர்ட்) ராஜசேகர் இவர்களுடன் சிறிது தாமதமானாலும் இயக்குனர் டி.ராஜேந்தரும் வந்து சேர்ந்துகொள்ள களைகட்டியது விழா மேடை.

மணல் நகரம் படத்தைப் பொறுத்தவரை நடிப்பதற்கென்று இந்தியாவிலிருந்து படத்தின் நாயகன் ப்ரஜின், நாயகி தனிஷ்கா, கௌதம் என மூவர் மட்டுமே சென்றுள்ளனர். மற்ற துணைப் பாத்திரங்கள், கூட்டம், கும்பல் எல்லாம் அங்குள்ளவர்களே பயன்படுத்தப் பட்டுள்ளனர். ‘மணல் நகரம்’ படத்துக்கு துபாயில் 52 நாட்கள் நடத்தி படப்பிடிப்பு முழுப்படத்தையும் எடுத்து முடித்து உள்ளனர்.
Manal Nagaram 2