தள்ளிப்போகிறது ‘மெட்ராஸ்’ ரிலீஸ்..?

வசூல் சிதறிவிடக்கூடாது என்பதற்காக வரும் ஜூலை-25ஆம் தேதி போட்டியில் இருந்து சற்று ஒதுங்கியிருக்கிறது கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ திரைப்படம். ஏற்கனவே விஜய் ஆண்டனியின் சலீம், படத்துடன் ‘மெட்ராஸ்’ படமும் ஜூலை-25ல் ரிலீஸாவதாகத்தான் பிளான். ஆனால் சில தினங்களுக்கு முன் இதே தேதியில் ஆஸ்கர் பிலிம்ஸின் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ சேர்ந்து கொண்டது. அதைத்தொடர்ந்து இப்போது கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா’வும் இணைந்துள்ளது.

இந்த மூன்று படங்களுடன் சேர்ந்து வெளியானால் வெற்றியை சிந்தாமல் சிதறாமல் ருசிக்க முடியாது என்று முடிவு செய்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ‘மெட்ராஸ்’ படத்தின் ரிலீசை தள்ளிவைத்துள்ளது. அதே நேரம் கார்த்தியின் அண்ணன் சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படம் ஆகஸ்ட்-15ல் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.