“இத்தனை வருடமாக எங்கே இருந்தீர்கள் கார்த்திக்?” – கே.வி.ஆனந்த் பரவசம்..!

பாரதிராஜாவின் அறிமுகமாக ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் தமிழ்சினிமாவில் நுழைந்த நவரச நாயகன் கார்த்திக் சினிமாவில் செய்யாத சாதனைகள் ஏதும் பாக்கியில்லை என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் இந்த நவரச நாயகன் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கிவரும் அநேகன் படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்தப்படத்தின் எடிட்டிங்கில் அமர்ந்த கே.வி.ஆனந்த் கார்த்திக் சம்பந்தப்பட்ட க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளை எடிட் செய்து பார்த்தபோது அவரது நடிப்பை கண்டு அசந்துபோனாராம். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள கே.வி.ஆனந்த், “என்னா ஒரு நடிகர்.. இத்தனை வருடமாக எங்கே போயிருந்தீர்கள் சார்..? ‘அனேகன்’ படத்துக்கு நீங்கள் கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டம்” என்கிற ரேஞ்சில் பரவசப்பட்டுள்ளார்.