விநாயகர் சதுர்த்தியை மையப்படுத்திய கிரைம் காமெடி படம்

unnamed (39)

சென்னையில் கோலாகலமாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில், சீர்குலைப்பதற்காக நான்கு தீவரவாதிகள் மெரீனா கடற்கரைக்கு வருகிறார்கள். இதேபோல் நான்கு இளைஞர்கள் வெளியூரிலிருந்து சென்னையை சுற்றிப்பார்க்க மெரினா வருகிறார்கள். கூட்டத்தை பயன்படுத்தி மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கொள்ளையடிக்க அங்கு வருகிறார்கள். இவர்கள் கொள்ளையடித்தார்களா? குண்டுவைத்தார்களா? சுற்றிப்பார்க்க வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று முழுக்க முழுக்க நகைச்சுவை, கிரைம் கலந்த படமாக உருவாகிறது ‘லகுட பாண்டியர்கள்’.

சினி நிலையா கிரியேஷன்ஸ் LLP சார்பாக P.V.ஸ்ரீராம் ரெட்டி அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற 4 மொழிகளில் அதிக பொருட்செலவில் தயாராகிறது.

மகாதேவ், கிருஷ்ணா, அமர், தேஜா ஆகியோர் கதாநாயகர்களாகவும், அஞ்சனா மேனன் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். பாண்டியராஜன், கஞ்சாகருப்பு, யோகிபாபு, மதுமிதா, சுமன், டெலிபோன்ராஜ், சக்திவேல், K.P.சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆந்திரா அரசின் மிக உயரிய விருதான நந்தி விருதை பெற்ற பிரயசிராவே, ஹனுமந்த் படங்களை இயக்கிய சந்திரமகேஷ் இந்த படத்தின் திரைக்கதையை எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே தெலுங்கில் 8 படங்களை இயக்கியவர். செம்மொழி பூங்காவில் K.பாக்யராஜ் அவர்கள் கிளாப் அடித்து துவங்கி வைத்து இதன் படப்பிடிப்பை துவக்கி வைத்ததோடு, சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.