ஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கும் ராட்சசன்..?

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் உருவான இந்த ‘ராட்சசன்’ பள்ளி பெண் குழந்தைகள் கடத்தப்படுதல், தொடர் கொலையை மையமாக வைத்து கிரைம், த்ரில்லிங் படமாக வெளியானது.

இப்படத்தை காமெடி கலகலப்பாக உருவான ‘முண்டாசுப் பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசை, பிவி ஷங்கர் ஒளிப்பதிவு, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி – ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து ராட்சசனை தயாரித்திருந்தன.

ராட்சன் பட இசையமைப்பாளர் ஜிப்ரானிடம், உத்தம வில்லன் படத்தில் பணியற்றிய சர்வதேச கலைஞர் ஒருவர், ‘ராட்சசன்’ படத்தின் ஹாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான ரைட்ஸைப் பெறுவது குறித்து கேட்டதாக கூறியுள்ளார்.
அப்படி ராட்சசன் படத்தின் ஹாலிவுட் ரைட்ஸ் கிடைக்கும் பட்சத்தில் ஹாலிவுட்டுக்கு ரீமேக் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response