கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய கட்சி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசன் கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அதை வளரவிடுவது தமிழக மக்களுக்கே ஆபத்தாக போய் முடியும். வெளிநாட்டு தீய சக்திகளுடன் கமல்ஹாசன் கைகோர்த்துக்கொண்டுள்ளதை போன்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஏதோ தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல்ஹாசன் வேடமிடுகிறார். ஆனால், அது தேர்தல் களத்தில் ஒத்துவராது. அதிமுகவிற்கு எதிரி திமுக மட்டும்தான். கமல்ஹாசன் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், அரசியலில் நான் நான் 8 மாத குழந்தையாக நிற்கிறேன். ஆனால், சிறுபிள்ளை என நினைத்து விடாதீர்கள். மக்களுக்காக பறக்கிறேன். வேட்டையாடி விளையாடுவது என் வேலை அல்ல என்றும், தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிப்பவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response