காவிரியில் 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது : நதியோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுகொள்..!

காவிரியிலிருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி நதியோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கபினி அணையில் இருந்து 85,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ் ) அணையிலிருந்து 60,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதையடுத்து காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், மேட்டூர் அணை இவ்வாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பும் வாய்ப்பு மலர்ந்துள்ளது. இவ்வாண்டு காவிரி பிரச்சினை எழ வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response