முகப்பேரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான உயர்கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்பு வழிக்காட்டி முகாம்…

சென்னை முகப்பேர் மேற்கு வேலம்மாள் பள்ளியில் இளைஞர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்புக்கான இலவச வழிகாட்டி முகாம் நடைபெற்றது. இந்த முகாம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் P.V. தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வருமான வரி இணை ஆணையர் நந்தக்குமார், வருமான வரி துறை அதிகாரிகள் பாஸ்கரன் கிருஷ்ண மூர்த்தி, ராணி மேரி, பேராசிரியர் உமா மகேஸ்வரி, வருமான வரி ஆய்வாளார் வீரபாகு, மீரா பாய், பழனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் மாணவர்களுக்கு மேல் கல்வி குறித்தும், ஜஏஎஸ், ஐபிஎஸ், ஆகிய தேர்வுகளை எதிர்கொள்ளுவது பற்றியும், இதில் இருக்ககூடிய நடைமுறை சிக்கல், சந்தேகங்கள், இவைகளுக்கான அறிவுளைகளையும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்கினர்.

இந்த நிகழ்வில் சுமார் 100 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இத்தகைய உயர்கல்வி மற்றும் வேலைவாய்புக்கான இலவச வழிகாட்டி முகாம் ஒவ்வொரு நகரங்களிலும், கிராமங்களிலும் நடைபெற்றால் அதில் மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.

Leave a Response