காஷ்மீரில் 8வயது சிறுமி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை எதிர்த்து சென்னையில் மெழுகுவத்தி ஏந்தி அறப்போராட்டம்…

ஜம்மூ காஷ்மீர் மாநிலம் ரசானா கிராமத்தைச் சேர்ந்தவர் மொஹத் யூசப். இவருக்கு 8வயதில் ஒரு மகள் உள்ளார். யூசஃப் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி ஹீரா நகர் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் ஜனவரி 10ஆம் தேதி நண்பகல் 12.30 மணியளவில் குதிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற தனது மகளை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் உள்ளூர் காவல்துறையினரால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி காணாமல் போன 7 நாட்களுக்கு பிறகு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து பல இடங்களில் போரட்டங்கள் நடந்தவண்ணம் இருக்கிறது.

இதனை தொடர்ந்து சென்னை எக்ஸ்ப்ரஸ் அவன்யூ அருகில் அந்த சிறுமிக்காகவும் இது போன்ற குற்றங்கள் அதிகரிக்காமலும் இருக்க மெழுகுவத்தி ஏந்தி அறப்போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *