காவிரி மோலாண்மை அமைக்கக் கோரி-விவசாயிகள் ‘தூங்கும் ஆர்ப்பாட்டம்’

காவிரி மோலாண்மை அமைக்கக் கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தூங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மோலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், விவசாய சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த விவசாயிகள், காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி படுத்து தூங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்தறத்தில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 15வது நாளாக அதிமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனர். அதிமுக சார்பில் மார்ச் 29ம் தேதி வரை பொறுத்திருப்போம், அதற்கு பின்னர், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முடிவு எடுப்பது குறித்து ஆலோசிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் வரும் 26ம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் குழு ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை அமைக்க கோரி, டெல்லி வரை நடைபயணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

Leave a Response