பொங்கலுன கரும்பு..அதை விளைவித்த விவசாயியை மறந்த தமிழகம்.. பி.ஆர்.பாண்டியன் வேதனை.

sugarcane 2

கரும்பு விவசாயிகள் பேச்சுவார்த்தையை அமைச்சர் சம்பத் கைவிட்டதால் விவசாயிகளுக்கு இழப்பு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்..
தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளுக்கு மத்திய,மாநில அரசுகள் நிர்ணயம் செய்த விலையின் அடிப்படையில் கடந்த 2013 – 2014ம் ஆண்டு முதல் 2017 வரை மொத்தம் சுமார் 3 கோடியே 30 லட்சம் டன் கரும்புக்குடன் 1 க்கு ரூ 40 வீதம் ரூ 140 கோடி நிலுவை தொகையை உடன் வழங்க கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.தமிழக அரசுவிவசாயிகளின் போராட்டத்திற்கு உரிய மதிப்பளிக்க மறுத்து வந்த நிலையில் கடந்த
ஜனவரி 5ம் தேதி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒங்கினைப்புக் குழு சார்பில் தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்கப்பட்டது.

இதனையறிந்த தமிழக அரசு போராட்டத்தை திசை திருப்பும் உள்நோக்கத்தோடு அன்று மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர் சம்பத் அவர்கள் ஆலை முதலாளிகளோடு விவசாயிகள் பேசிக் கொள்ளுங்கள் என்று ஆலை முதலாளிகளுக்கு மறைமுக ஆதரவாக நழுவிக் கொண்டார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.இந்நிலையில் அமைச்சரின் உள்நோக்கத்தை புறிந்துக் கொண்ட விவசாயிகள் ஆலை முதலாளிகளோடு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மொத்த நிலுவைத் தொகை ரூ 140 கோடியில் ரூ124 கோடியை வழங்குவதாகவும் அதனை 4 ஆண்டுகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளும் பங்கிட்டுக் கொள்வது என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அமைச்சரின் ஒரு தலைபட்சமான செயல்பாட்டால்ரூ 16 கோடி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு தமிழக அரசே பொருப்பேற்க வேண்டும் என்றார்.

Leave a Response