சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவி ஏற்பு!

 Madras-high-court

ஒடிசா  உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி சத்ருகனா புஜாரி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் நீதிபதி சத்ருகனா புஜாரியை வரவேற்றுப் பேசினர். பின்னர் ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி சத்ருகனா புஜாரி, பாரம்பரியம் மிக்க இந்த உயர் நீதிமன்றத்திற்கு பணியாற்ற வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

அவரது உரையில் “பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியாற்ற வந்துள்ளது மகிழ்ச்சி. வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கியபோது, சென்னை நீதிமன்ற தீர்ப்புகள் பலவற்றை முன்னுதாரணமாக எடுத்துப் படித்து வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தேன். இப்போது அதே நீதிமன்றத்திற்கு நீதிபதியாக வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று தெரிவித்தார்.

புதிய நீதிபதி பதவி ஏற்றதன் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளன. மேலும் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன

Leave a Response