டில்லியில் வாகன கட்டுப்பாட்டிற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி! பெண்கள், இருசக்கர வாகன விலக்கு ரத்து!

large_delhi-fog-34084

டில்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களை இயக்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் முறைக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. காற்று மாசு டில்லியில் , காற்று மாசு பிரச்னை மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிரச்னையை சமாளிக்கும் வகையில், டில்லியில் கார்களை இயக்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் முறையை, மீண்டும் கொண்டு வர, டில்லி அரசு முடிவு செய்துள்ளது.

வரும், 13 முதல், 17ம் தேதி வரை, ஒரு நாள், ஒற்றைப்படை எண் உள்ள கார்களும், மறுநாள், இரட்டைப் படை எண் உள்ள கார்களும் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று டில்லி அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு:

இந்த திட்டத்திற்கு கார்களை இயக்கும் நடைமுறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

Tamil_News_large_1643906

கடந்த முறை அரசு ஊழியர்கள், இரு சக்கர வாகனங்கள், பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்ததை இந்த முறை ரத்து செய்யப்படுகிறது. காஸ் மூலம் இயங்கும் வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை போன்ற அவசர கால வாகனங்களுக்கு மட்டுமே, இந்த கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்.

இந்த கட்டுப்பாட்டில், அரசு அதிக சலுகை வழங்க வேண்டிய அவசியம் ஏன்? இந்த கட்டுப்பாடை மக்கள் பின்பற்றாவிட்டால், காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு எப்படி கட்டுபடுத்த போகிறது.

Leave a Response