‘மெர்சல்’ படத்தின் மறு தணிக்கைக்கு கமல் கடும் எதிர்ப்பு!

8p3

மெர்சல் படத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமல் ஆதரவு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் , இயக்குனர் அட்லி கூட்டணியில்  உருவான மெர்சல் திரைப்படம்  பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி தீபாவளியன்று வெளியானது. இதில் ஜி.எஸ்.டி, பண மதிப்பு இழப்பு மற்றும் மத்திய அரசை குறித்து சில காட்சிகள் வசனத்துடன் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த காட்சிகளை நீக்க கோரி வலியுறுத்து வருகின்றனர். இந்தநிலையில் மெர்சல் படத்தில் உள்ள சர்ச்சைகுரிய காட்சிகள் நீக்கப்பட்டு மறு தணிக்கை செய்ய போவதாக தகவல் வெளியானது.

517328be-0e1d-4f84-814d-efd435ea43ff

இதற்கு நடிகர் கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ‘‘மெர்சல் படம் தணிக்கை சான்றிதழை ஏற்கனவே பெற்றுள்ளது. எனவே அதனை மறுதணிக்கை செய்ய வேண்டாம்.  விமர்சனங்களை தர்க்கரீதியான முறையில் எதிர்கொண்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும். மாறாக, விமர்சிப்போரை மவுனமாக்கக் கூடாது. கருத்துகளை வெளிப்படையாக பேசும்போது தான் இந்தியா மிளிரும்’’. இவ்வாறு டிவிட்டரில் கமல் பதிவிட்டுள்ளார்.

Leave a Response