யார் மூஞ்சியில் கரி பூச நினைக்கிறீர்கள் துணை முதல்வரே?

 

vijaya-bhaskar_2017_6_3

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தலைவிரித்தாடுகிறது.  நாளுக்குநாள் உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்த பன்னீர்செல்வம் இதுப்பற்றி பிரதமரிடம் ஆலோசனை நடத்துவாரென எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் நிலைமை அரசு கைமீறி  சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் பிரதமரிடம் எய்ம்ஸ் மருத்துவர்கள் தலைமையில்  சிறப்பு குழு அமைக்க  வலியுறுத்துவரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “தான் நிலக்கரி இருப்பு பற்றி பேசியிருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் துணை முதல்வர்.
xpanneerselvam-modi-14-1502701083-12-1507787048.jpg.pagespeed.ic.6c1aNZkMkr

 

மக்களும் குழந்தைகளும் கொத்துகொத்தாக இறந்துக்கொண்டியிருக்கும் வேளையிலும் ,தமிழகத்தில் (அக். 9ம் தேதி வரை) 11,744 பேருக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சொல்கிறது அரசு தரப்புப் புள்ளி விவரம்.

“இது அப்பட்டமான பொய்யென இதை அறிவித்த சகாதாரத்துறை சார்ந்த அமைச்சருக்கே தெரியும். டெங்குவுக்கு இதுவரை நூற்றுக்கணக்கானோர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. நாள்தோறும் வெளியாகும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்தத் தகவலை எல்லாம் மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது அரசின் சுகாதரத்துறை.  டெங்குவால் இதுவரை அல்லாத அளவு உயிரிழப்பு இருக்கிறது. டெங்கு நோயாளிக்கு வேறு உடல் நல பாதிப்பு இருந்தால் அவர் டெங்குவால் இறந்தார் எனச் சொல்ல வேண்டாம் என்கிறது சுகாதாரத்துறை. இதனால் பலர் மர்மக் காய்ச்சலால் இறந்தாதாக சொல்லவேண்டியுள்ளது” என்கிறார்கள் அரசு மருத்துவமனை வட்டாரங்கள்.

radha

இதைத்தடுக்க இதுவரை அரசுத்தரப்பில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.

‘’மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இதுபோன்று பரவும் நோய்களைத் தடுக்கமுடியும் அவர்கள் சரியான ஒத்துழைப்புத்தர மறுக்கிறார்கள்” என்கிறார் சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன்.

இதையெல்லாம் சரியாக பேசும் அரசுத்தரப்பு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்றுக்கேட்டால் ‘பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் குடுக்க ஏற்பாடு செய்தியிருக்கிறோம்” என்கிறார்கள்.

நிலவேம்பு கசாயத்தை ஏதோ டெங்கு காய்ச்சலுக்கான மருத்துபோல இலவச மார்கெட்டிங் செய்துவருகிறது அரசு.

076b7fe2-63fa-4a2f-b6d4-4917579a3e49_11190

 

இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும் அரசின் கஜானாவை நிரப்பிக்கொள்ள நேற்று மதுபான விலையுயர்வு, இன்று ஆட்சியிலும் கட்சியிலும் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள பிரதமர் சந்திப்பு என எல்லா விழாக்கொண்டாட்டங்களும் வெகுவிமர்சையாக நடக்கிறது இந்த அரசில்.

AIADMK_GC-kTU--621x414@LiveMint

இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்த பன்னீர்செல்வம் தமிழகத்தின் டெங்கு பாதிப்பு பற்றி ஆலோசனை நடத்துவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தலைமையில்  சிறப்பு குழு அமைக்க  வலியுறுத்துவார் எனவும்  எதிர்பார்க்கப்பட்டது , ஆனால் அவரோ தான் நிலக்கரி கையிருப்பு பற்றியும் கூடுதலாக எவ்வளவு நிலக்கரிகள் தேவை என்பது பற்றியும் பேசியிருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்.

உண்மையில் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் கூடுதல் நிலக்கரிகளை வாங்கி யார் முகத்தில் கரி பூச நினக்கிறீர்கள் துணை முதல்வரே?

Leave a Response