குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு!

201604051356560667_Chennai-voting-booth-418-tense_SECVPF

பெரிதும் எதிர்பார்க்கப்படும் குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.

குஜராத்தில் ஆனந்தி பென் தலைமையில் பாஜக ஆட்சியும், ஹிமாச்சல பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. எனவே இத் தேர்தல் இவ்விரு கட்சிகளுக்குமே முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளும், ஹிமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. சட்டசபை ஆயுட்காலம் நிறைவடையும் நிலையில், இவ்விரு மாநிலங்களுக்கும் அடுத்த சில மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. டெல்லியில் மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். இந்திய

குஜராத்தில் இரு கட்டங்களாகவும், ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response