புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..!

Ovia Movie 4
இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இப்படத்தில் காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்.

இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.

இன்றைய எந்திரமயமான, அதேசமயம் வேகமாகிப்போன வாழ்க்கை சூழலில் பெரும்பாலான கணவன்-மனைவியர்க்கிடையே சரியான புரிதல் இல்லாத நிலைதான் இருக்கிறது. அதுவே இவர்கள் பெற்றோர்களாக மாறியபின்பும் இந்த புரிதல் இல்லாமை தொடர்வதால், பாதிக்கப்படுவது பெரும்பாலும் அவர்களது குழந்தைகள் தான். என ஆய்வுகள் சொல்கின்றன.

அப்படி ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று, அதன் பெற்றோர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, சண்டையினால் சரியான கவனிப்பின்மை இல்லாத காரணமாக அந்த குழந்தை இறந்து பேயாக மாறுகிறது. அதன்பின் தனது இந்த நிலைமைக்கு காரணமான தனது பெற்றோருக்கு அது பாடம் புகட்டுகிறதா, இல்லை பாவம் என விட்டுவிடுகிறதா என்பது தான் படத்தின் கதை.

மலையும் மலைசார்ந்த இடமும் தான் கதைக்களம் என்பதால் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு, இறுதிக்கட்ட படப்பிடிப்பினை வருகிறது.

இப்படத்தில் காண்டீபன், மிதுனா, சுவிக்சா ஜெயரத்தினம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் கையாள்கின்றனர். அண்ணாமலை, முருகன் மந்திரம் & M.F.ஜான்சன் பாடல்களை எழுத, வைக்கம் விஜயலக்ஷ்மி, ஆனந்த் அரவிந்தக்ஷன், ஜாஸின் மற்றும் பூர்ணிமா பாடல்களை பாட, பத்மஜன் இசையமைத்துள்ளார். இப்படத்தினை கஜன் சண்முகநாதன் இயக்க, ‘இமாலயன் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்துள்ளார்.

Leave a Response