உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் காஷ்மோரா வெளியாகிறது


kashmora_poster__by_rockfortmukesh-daf8rt5கார்த்தி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ’கஷ்மோரா’. கார்த்தி படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இதுதான். இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.

அக்டோபர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 1700 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை  வெளியிடுகிறது.


 

Leave a Response