திரைப்பட விழாக்களுக்கு வராமல் கடை திறப்புக்கு செல்லும் நயன்தாரா ஒரு பணப் பேயா?

Nayanthara at Kalyan Silks 1
தமிழ் திரையுலகில் சில நடிகர், நடிகைகளின் அட்டுழியம் சற்று அதிகம் என்று பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் புலம்புவது வழக்கம். அதில் சில உண்மைகளும் அடங்கும். உதாரணத்திற்கு உச்ச நடிகர் அஜித், வியாபாரம் இல்லாத ஜெய், நடிகைகள் திரிஷா, நயன்தார மற்றும் நித்யா மேனன் ஆகியோர் அடங்குவர். குறிப்பாக இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு போன்ற நிகழ்சிகளில் இவர்கள் பங்குபெறுவதை தவிர்ப்பது வழக்கம். தயாரிபாளர்களோ இத்தகைய நிகழ்சிகள்தான் தங்கள் படத்திற்கு ஒரு கூடுதல் விளம்பரம் மற்றும் பிரசாரத்தை செய்யும் என்று நம்புவதும் அதுவே உன்னை என்பதாகும்.
Crowd at Kalyan Silks
நடிகை திரிஷா தன்னுடைய சில திரைப்பட விழாக்களில் கலந்துகொள்வார். அஜித் எட்டிப்பார்ப்பது கிடையாது. ஜெய்யை எவரும் எதிர்பார்பதில்லை ஆகையால் ஒரு பிரச்னையும் இல்லை. இதில் அஜித் நடிப்பு மற்றும் கார் பந்தயத்தில் மட்டும் கவனம் செலுத்தி மற்ற விழாக்களில் அல்லது விளம்பரங்களில் தன்னை ஈடுபடுதிக்கொல்வதில்லை அன்பது திரையுலகம் அறிந்தது.
Crowd at Kalyan Silks-2
ஆனால் நயந்தாராவோ தான் நடித்த படங்களின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, மற்றும் எந்த திரைத்துறை விழாக்களிலோ கலந்துகொள்வதில்லை என்பது இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்களின் பெரிய வருத்தம். அப்படிப்பட்ட நயன்தாரா, நகையும் சதையும் போலான தன் சக நடிகர் ஆர்யா தயாரித்து, அவருடைய தம்பி நடித்த “அமர காவியம்” திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா பிரத்தியேகமாக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியா மற்றும் நயன்தாரா பற்றி கிசுகிசு அவ்வப்போது பேசப்படுவது வழக்கம்.
Crowd at Kalyan Silks-Police Lathi Charge
சமீபத்தில் நயன்தாரா மற்றும் ஆரி நடித்து வெளிவந்த “மாயா” திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து “மாயா” படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் அஷ்வின் சரவணன், நடிகர் ஆரி, இசையமைப்பாளர் ரோன், தெலுங்கில் படத்தை “மயூரி” என்று வெளியிட்ட பிலிம் சேம்பர் கல்யான் மற்றும் நயன்தாராவை தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர், நயன்தாரா கொச்சின் சென்றுள்ளதாக தெரிவித்தார். காரணம் அவருக்கு அப்படிப்பட்ட ஒரு பொய்யைத்தான் நயன்தாரா சொல்லியிருப்பார்போல? ஆனால் உண்மை என்னவென்றால், நயன்தாரா சேலத்தில், கல்யான் ஜவுளிகடை திறப்புவிழாவில் கலந்துகொண்டார். அங்கு கலந்துகொண்ட நயன்தாராவை காணச்சென்ற ராசிகர்களுக்கு காவல்துறையின் லத்தி அடி மிச்சம், நய்ந்தாராவிற்கோ சுளையாக ரூபாய் இருபத்தஞ்சி லட்சம் வருமானம். திரைப்படை இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டால் அவர்களுக்கு பணவரவு இல்லை என்பதினால் நயந்தாராவைபோல் சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் சொந்த பட விழாக்களுக்கு வராமல் தவிர்த்துவிடுகிறார்கள். இவர்களை தங்கள் விழாக்களுக்கு அழைக்க செல்லும் அப்பட தயாரிப்பளர்களையும், இயக்குனர்களையும் மனம் நோவும் அளவிற்கு நக்கல் செய்வது இவர்களின் வழக்கம். “மாயா” பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு நயன்தாராவை அழைத்த தயாரிப்பாளர் பிரபுவை எப்படி நடத்தினார் என்பது இவர்கள் இருவருக்குதான் வெளிச்சம். “மாயா” பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு வராமல் கடை திறப்புக்கு சென்ற நயன்தாரா ஒரு பணப் பேயா?

பல வருடங்களாக நடக்கும் இந்த அலுப்பரைகளை அனைத்தும் தெரிந்த அறிந்த தயாரிப்பாளர்கள் சங்கமோ, நடிகர் சங்கமோ எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது மிக கேவலம். ஆனால், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தினர் இத்தகைய பிரச்சனைகளை பற்றி பேசும்போது, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிப்பார்கள் ஆனால் அது புஸ்…………..வானம்தான்.

பாவமடா படத்தயரிப்பளர்கள்!

Leave a Response