“ரஜினி முருகன்” படம் வெளிவர சிக்கல் ஏற்படுத்தியவர் அந்த அண்ணன் தம்பி நடிகர்களுடைய ஆசான தயாரிப்பாளரா?

Rajini Murugan Release Problem
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்ரகனி மற்றும் கனகா நடித்துள்ள திரைப்படம் “ரஜினி முருகன்”. இந்த படம் சுமார் முன்று மாதங்களுக்கும் முன்பாக முடிவடைந்து திரைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக என்.சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ளனர். இந்நிறுவனம் இதற்கு முன்பாக பல படங்களை தயாரித்தும், வெளியிட்டும் உள்ளது. அதில் சில வெற்றியும் சில படங்கள் படு தோல்வியும் அடைந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள், பிலிம்மையும் தாண்டி பல வகை டிஜிட்டல் முறையில் குறைந்த பொருட்செலவில் தயாரிக்க வழிவகுத்துள்ளது. இந்த குறைந்த தயாரிப்பு செலவின் காரணத்தால் பலர் திரைத்துறையை தேர்ந்து படங்கள் தயாரிக்கின்றனர். இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் குறைந்த முதலீட்டில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் அல்ல, ஆனால் அந்த படங்களின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளமோ மலையுட்சியை போல் வளர்ந்துள்ளது. அந்த நடிகர் நடிகைகளின் சம்பளத்தையும் தாண்டி விளம்பரம் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் அச்ச்சடிகப்பட்ட செய்திதாள்களும், மாத மற்றும் வார இதழ்கள் மட்டுமே இருந்தன. இன்று அவைகள் மட்டுமின்றி பல தொலைகாட்சிகள், இணையதள ஊடகங்கள், சமுகவளைதலங்கள் என நாளுக்கு நாள் ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் திரைப்படங்களின் தயாரிப்பு செலவோ மிக உயர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் பல தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்துள்ள படங்களை வெளியிடுவது என்பது குதிரை பந்தயத்தில் ஈடுபடுத்துவதை போல் ஆகிவிட்டது. பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகளின் கால்சீட்டு பிரச்சனை காரணத்தினால், தாங்கள் தயாரிக்கிற படம் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிக்கமுடியாமல் கந்து வட்டி கடன்காரர்களுக்கு பல கோடி ருபாய் வட்டியாக செலுத்தி வருகின்றார். வட்டியை மட்டுமே செலுத்த முடிந்த சிலரும், அடாவடி வட்டியை செலுத்த முடியாமல் சில தயாரிப்பளர்களும் தாங்கள் தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் உள்ளனர். அந்த வகையில் சிக்கியிருப்பவர் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் லிங்குசாமி.

தாங்கள் முன்பு தயாரித்த படங்களின் கடனை அடைகாத காரணத்தினால் இவர்கள் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட “உத்தம வில்லன்” திரைப்படத்தை வெளியிடுவதற்கு பெரும் கஷ்டப்பட்டனர். அப்போது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு அண்ணன் தம்பி நடிகர்களுடைய ஆசான தயாரிப்பாளர் ஒருவர், சில தயாரிப்பாளர்கள் மற்றும் தனி நபர்களால் வட்டிக்கு பணம் உதவி அந்த படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியிட உதவினர். “உத்தம வில்லன்” வெளியீடும் பிரச்சனையின் போது திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ஈரோஸ் நிறுவனம் இடையில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அதில் திருப்பதி பிரதர்ஸ் நாற்பது கோடி ருபாய் பின்னர் தருவதாக குறிப்பிடப்பட்டு அந்த படம் அன்று வெளியானது.

இப்போது அந்த அண்ணன் தம்பிக்கு ஆசான தயாரிப்பளருக்கும் திருப்பதி பிரதர்சுக்கும் வேறு ஒரு காரனத்திற்காக(அடுத்து விரைவில் அந்த செய்தி)பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பதி பிரதர்ஸ் பற்றி அவ்வப்போது அண்ணன் தம்பி நடிகர்களிடம் குறை சொல்லிவந்துள்ளர் அந்த தயாரிப்பாளர். இதை நம்பி அந்த அண்ணன் தம்பி நடிகர்கள் தாங்கள் கொடுத்திருந்த கால்சீட்டை திரும்ப பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

அன்று “உத்தம வில்லன்” பிரச்சனையில் “ஈரோஸ்” நிறுவனத்தில் திருப்பதி பிரதர்ஸ்’க்கு நல்லவராக உதவிய அந்த அண்ணன் தம்பி நடிகர்களுடைய ஆசான தயாரிப்பாளர் தான் இன்று “ரஜினி முருகன்” திரைப்படம் வெளியிட முட்டுக்கட்டை போடுபவர், என்று கோடம்பாக்கம் வட்டாரம் பேசுகிறது. அப்படி என்னத்தான் செய்தாறு அந்த தயாரிப்பாளர்? சும்மா ஈரோஸ்ல வாயால திரிய கொளுத்திவிட்டுடாறு. அதாவது, திருப்பதி பிரதர்ஸ் “ரஜினி முருகன்” படத்தை நல்ல விலைக்கு விற்றுள்ளனர், ஆகையால் நீங்கள் போட்ட பழைய ஒப்பந்ததம் படி நாற்பது கோடி ருபாய் வாங்காமல் கொஞ்சம் அதிகமா கேளுங்க, அப்புடி சொல்லிபுட்டாரு. ஈரோஸ் கார்பரேட்டு கம்பனி ஆச்சே! சும்மாவா இருப்பாங்க கொஞ்சம் கேக்கமாட்டேன், அதிகமா வேணும்னு கொடி தூக்கிட்டாங்க. ஒப்பந்தம் இருக்கேனு நீங்க நினைக்கலாமுங்க, ஆனா இது சினிமால? இங்கு ஒப்பந்தம் ஈரோசுக்கு சாதகமா இருக்கு.

சிவகர்த்திகேயன் ஒரு கோடி ருபாய் சம்பளம் வாங்கும் போதே, அவருடன் திருப்பதி பிரதர்ஸ் ஒப்பந்தம் போட்டு, ருபாய் ஐந்து கோடி சம்பளம் கொடுத்திருக்காங்க. ஆனால் இன்று வரை சிவகார்த்திகேயன் எந்த வகையிலும் உதவி கரம் நீட்ட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதுக்கு அந்த அண்ணன் தம்பிக்கு ஆசான தயாரிப்பளருக்கு இந்த குசும்பு வேலைனு கோடம்பாக்கத்து குப்பனுங்க புலம்புறாங்க. இந்த இக்கட்டான சூழலில் இருக்கும் இயக்குனர் லிங்குசாமியை, எடிட்டர் மோகன் தொடர்புகொண்டு படம் வெளியிட உதவிபுரிவதாக அதே கோடம்பாக்கம் வட்டாரம் சொல்லுது.

Leave a Response