பாலு ஆனந்த் இயக்கத்தில் கலகல காமெடி படம் “சந்தித்ததும் சிந்தித்ததும்”!!

DSC_1083

சிபி சாம் சினி ஆர்ட்ஸ் என்ற  பட நிறுவனம் சார்பாக சிபி சக்கரவர்த்தி தயாரிக்கும் படம் “சந்தித்ததும் சிந்தித்ததும்”. இந்த படத்தில் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக உதாஷா நடிக்கிறார். கஞ்சா கருப்பு, நிழல்கள் ரவி, பாலு ஆனந்த், ரஷியா ரித்விகா, சபிதா ஆனந்த், காதல் சரவணன், கிங்காங், டென்சிங், சோப்ராஜ், மற்றும் எல்.ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பிரடிடேவிட். இசை – சபேஷ் முரளி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாலு ஆனந்த். சுமார் பதினைந்து படங்களை இயக்கியதுடன் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்தும் இருப்பவர் பாலு ஆனந்த்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “இது முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி படம். பெங்களூரில் போலீஸ் ரெகார்ட் மற்றும் பத்திரிக்கைகளில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ஒருவன் தமிழ்நாட்டில் உயிருடன் வாழ்கிறான். அவன் எப்படி இறந்தான், எப்படி வாழ்கிறான் என்பது கதை. அப்படி தமிழ்நாட்டில் வாழும் ஒருவனது காதல் கதையை காமெடியாக உருவாக்கி இருக்கிறோம். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.