ஓடாத படத்தை ஓட்ட தியேட்டரை பிளாக் பண்றாங்க – கேயார்!

Keyar-Mullaiperiyar

அசோக் நடித்துள்ள “காதல் சொல்ல ஆசை” படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய கேயார், “முன்பெல்லாம் தீபாவளிக்கு 14 படங்கள் வரை வெளியாகின. ஆனால் இப்போது அந்த நிலை மாறி, மூன்று படங்கள் வெளியாவதே கஷ்டம் என்றாகி விட்டது. இந்தப் படங்களுக்கே போதிய தியேட்டர் கிடைக்காத நிலை. அதே நேரம் ஒரே படத்துக்கு அதிக அரங்குகள் ஒதுக்கப்படுவதும் நல்லது தான். வேறு வழியில்லை. பைரசியை ஒழிக்க இதைச் செய்ய வேண்டியிருக்கிறது.

ஆனால் ஓடாத படத்தை ஓட்ட வைக்க வேண்டும் என்பதற்காக தியேட்டர்களை ப்ளாக் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் பல படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத நிலை. அஞ்சு பேர், பத்து பேரை வைத்துக் கொண்டு படத்தை ஓட்டுகிறார்கள். நடிகரைத் திருப்திப்படுத்த செய்யப்படும் இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. பத்திரிகையாளர்கள் இதை வெளிப்படுத்த வேண்டும்,” என்றார்.