எஸ்கேப் பிளான் – விமர்சனம்!

escape_plan_ver3

தமிழ் சினிமா வரலாற்றில் நடக்காத ஒரு விஷயம் ஹாலிவுட்டில் சர்வ சாதரணமாக நடக்கும். அது என்னவென்றால் இரண்டு, மூன்று பெரிய ஹீரோக்கள் இணைந்து சர்வ சாதரணமாக, எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் ஒரே படத்தில் நடித்து விட்டு போவார்கள். அப்படி இந்த முறை நடித்திருப்பவர்கள் ஹாலிவுட்டின் இரு பெரும் ஆக்ஷன் ஹீரோக்கள் அர்னால்டும், சில்வெஸ்டர் ஸ்டால்லோனும். அந்த படம் தான் எஸ்கேப் பிளான்.

Expendables I மற்றும் II படங்களில் கவுரவ வேடங்களில் நடித்திருந்த இவர்கள் இருவரும் முதன்முறையாக கைகோர்த்து நடித்திருக்கும் முழுநீள ஆக்ஷன் படம் எஸ்கேப் பிளான். இவர்கள் இருவரும் இணைந்து எதிரிகளை பந்தாடுவது தான் படத்தின் ஹைலைட்.

படத்தின் கதை, பலத்த பாதுகாப்பு அமைப்புகள் நடைமுறைப்படுத்தபட்டுள்ள, ஒரு அதிநவீன சிறையில் சிக்கிக்கொள்ளும் ஒரு மனிதன் அங்கிருந்து தப்பி செல்ல எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியது. அந்த திட்டத்தில் உறுதுணையாக இருப்பது மற்றொரு கைதி.

தப்பி செல்ல திட்டம் தீட்டும் கைதியாக Breslin என்ற கதாபாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்டால்லோன். இதில் முக்கிய அம்சம் அந்த சிறையின் பாதுக்கப்பு அம்சங்களை வடிவமைத்து கொடுத்ததே தொழில்நுட்ப வல்லுனரான ராய் தான். அந்த நுணுக்கமான பாதுகாப்பு அம்சங்களை தாண்டி தப்பி செல்ல உதவுகிறார் Swan Rottmayer. அதாவது அர்னால்ட். ஹோப்ஸ் என்ற ஜெயில் வார்டனாக நடித்திருக்கிறார் ஜின் காவிசெல்.

அலெக்ஸ் ஹீபர்-ன் இசையும், ப்ரெண்டனின் ஒளிப்பதிவும் படத்திற்கு இருபெரும் பலம். ஆக படத்திற்கு போனால் இரண்டு ஆக்ஷன் ஸ்டார்களை இணைத்து பார்த்த திருப்தி கிடைக்கும் என்பது கேரண்டி.