கேப்டன் பிலிப்ஸ் – விமர்சனம்!

Tom Hanks

நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக்கும்போது அந்த உணர்வு முழுமையாக பார்வையாளர்களுக்கும் கிடைப்பது மட்டும் நிஜம். இப்படி ஏற்கனவே நடந்த ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதப்பட்டு உள்ளது. அதன் பெயர் Captain’s Duty. Somali pirates, Navy seals, dangerous days at Sea ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் Paul Greengrass இயக்கித்தில் உருவாகியுள்ள படம் Captain Philips. Tom Hanks முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க, Muse என்ற கடற்கொள்ளையன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார் Barkard abdi.

அமெரிக்க கப்பல் ஒன்றின் கமாண்டிங் ஆபிசர் கேப்டன் பிலிப்ஸ். இவர்கள் நடுக்கடலில் பயணம் செய்யுபோது சோமாலியா கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தபடுகிறது. அவர்கள் பணம் கேட்க 3௦,௦௦௦ டாலர்கள் தான் இருக்கிறது என கேப்டன் சொல்கிறார். சரி என வாங்கி கொள்வது போல வாங்கி விட்டு, லைப் போட்டில் கிளம்பும்போது கேப்டனையும் கடத்தி செல்கிறார்கள்.

அவரை பணயமாக வைத்து மேலும் பணம் கேட்கிறார்கள். பின்னர் அவரை மீட்க அமெரிக்க கடற்படை கிளம்புகிறது. அதில் அவர்கள் கேட்ட பணம் அவர்களுக்கு கிடைத்ததா? கேப்டனை விடுவித்தார்களா? அவர்கள் தப்பி சென்றார்களா? என்பதை விறுவிறுப்பாகவும், உணர்வுகள் சிதையாமலும் காட்சிபடுத்தியுள்ளனர்.

படத்தில் கேப்டனாக நடித்த tom hanks அபாரம். கடற்கொள்ளையனாக நடித்த abdi மற்றும் மற்ற மூன்று பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் கப்பலில் வேலை செய்யும்போது ஏற்படும் கஷ்டமான அனுபவங்களையும் படம் முழுக்க வெளிபடுத்தியுள்ளனர்.

ஒரு பெரிய கப்பலை சிறிய படகில் வரும் கொள்ளையர்கள் எப்படி கடத்துகிறார்கள் என்பதை அற்புதமாக காட்டியுள்ளார் இயக்குனர். Henry jackman-ன் அற்புதமான இசையமைப்பு படத்தின் கதையோட்டத்திற்கு உதவுகிறது. Barry acroyd-ன் ஒளிப்பதிவில் கடலின் சீற்றத்தையும், அந்த கப்பலின் பிரமாண்டத்தையும் பார்க்க முடிகிறது. சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவருகிறது கேப்டன் பிலிப்ஸ்.