இளைய தலைமுறை மாணவர்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடல்!

amal

பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பி.ஜி.சுரேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படத்திற்கு ‘கோலாகலம்’ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் அமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, விகேஆர் ரகு மற்றும் விஷவாந்த் என்ற வில்லன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கே.எஸ்.செல்வராஜ், இசை – பரணி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கும் பி.ஜி.சுரேந்திரன்  படம் பற்றி கூறும்போது, “கோலாகலம் படத்திற்காக திருச்சி மாவட்டத்தில் அமல் நடிக்க

என் மைண்ட டிஸ்டர்ப் பண்ணாதே!

படிக்கனும், சம்பாதிக்கணும்

உழைக்கணும் – வீடு வாங்கணும்

கார் வாங்கணும், கல்யாணம் பண்ணனும்

புள்ள பெக்கணும் அதனால

என் மைன்ட்  டிஸ்டர்ப் பண்ணாதே  –  என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்த பாடல் இளைய தலைமுறை மாணவர்களின் மன உனர்வுகளை பிரதிபலிப்பது மாதிரி உருவாக்கப் பட்டுள்ளது என்கிறார் தயாரிப்பாளரும் , இயக்குனருமான பி.ஜி.சுரேந்திரன்.