இலங்கையிலேயே நடக்கும் மற்றுமொரு திரைப்படம்!

DSC_4247

மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் “யாழ்”. இந்த படத்தில் வினோத், டேனியல் பாலாஜி, சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா, நீலிமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு – கருப்பையா மற்றும் நசீர். இசை – எஸ்.என்.அருணகிரி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்  எம்.எஸ்.ஆனந்த்.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி.  இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையிலே நடக்கிறது. இதில் இந்திய, தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் பாடல்களும் ஈழத்தமிழிலேயே இருப்பது மற்றும் ஒரு சிறப்பம்சம். யாழ் என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசைக்கருவி.  பாணர்கள் என்பவர்கள் இக்கருவியை வைத்துக் கொண்டு சைவ சித்தாந்த கருத்துகளையும், தமிழர்களின் கலை மற்றும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பினார்கள். யாழ்ப்பாணம் என்ற ஊருக்கு பெயர் வந்ததே  அதனால் தான்.

யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும்  சம்மந்தபட்ட கதாபாத்திரங்களுக்கு இடையில் இப்பொழுது இறுதி போரின் போது  என்ன நடந்தது என்பதே திரைக்கதை. படம் நவம்பர் முதல் உலகமுழுவதும் வெளியிட உள்ளோம் என்றார்.