நாளைய இயக்குனர் இயக்கத்தில் “சிக்கிக்கு சிக்கிகிச்சு”!

_N0A7985

NCR கிரியேசன்ஸ் தயாரிப்பில் என்.ராஜேஷ் குமார் இயக்கத்தில் மிதுன், மிருதுளா நடிக்கும் ”சிக்கிக்கு சிக்கிக்கிச்சு”. படத்தின் தலைப்பே ஏதோ  வார்த்தை விளையாட்டு மாதிரி இருக்கேன்னு இயக்குனர் என். ராஜேஷ்குமாரைக் கேட்டால் சிரிக்கிறார். ”சார்! கதையே, இதுதான். தலைப்புலேயே கதைய சொல்லிட்டோம்.

நாம எங்கோ பிறந்து எப்படியோ ஏதோ ஒரு சூழ்நிலையில வளர்றோம்.  எப்போவோ  எதிர்பாராம நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சூழ்நிலையில இருந்து ஒரு பெண்ணை சந்திக்க நேரும். அவங்க நம்ம மனசுல நினைக்கிற அதே பொண்ணா இருப்பாங்க. அந்த பொண்ண எப்படியாவது வாழ்க்கையில இணைச்சிக்கனும்னு நினைச்சி போராடுவோம். அதுல ஜெயிக்கவும் செய்வோம். தோற்கவும் செய்வோம். ஆனால், அந்த பெண்ணால் நாம நேசிக்கப்படுற அந்த காலகட்டம் நாம காதல்ல ஜெயிச்சிட்டோம்னு தானே அர்த்தம்.

திருமணம் வரைக்கும்போனாதான் ஜெயிச்சதா நிறைய பேர் நினைக்கிறாங்க. அது தவறு. அந்த பொண்ணு மனசு நம்மகிட்ட வந்த மறுவினாடியே நாம ஜெயிச்சிட்டோம்கிறதுதான் உண்மை. இதைத்தான் சிக்க வேண்டியவங்களுக்கு சிக்கக்க வேண்டியவங்க சிக்கிக்கிட்டாங்கன்னு சொல்லியிருக்கோம்” என்றார்.

என்.ராஜேஷ் குமார் கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றவர். பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), நலன் குமாரசாமி (சூது கவ்வும்) வரிசையில் மறொரு இயக்குனராக களமிறங்கியுள்ளார் என்.ராஜேஷ் குமார்.  ”சிக்கிக்கு சிக்கிக்கிச்சு ” படத்தை தயாரித்து இயக்குகிறார்.

“சென்னையில் ஒருநாள்” படத்தில் பிரசன்னா, சேரனுடன் காரில் பயணப்படுபவராக  நடித்த மிதுன் ஹீரோ. நாகராஜசோழன் படத்தில் நடித்த மிருதுளா ஹீரோயினாக நடித்துள்ளார். ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ ஆதவன் காமெடியை கவனிக்கிறார்.

கதை முழுக்க முழுக்க ஒரு ரயிலில் நடக்கிறது. இதற்காக ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லும் அந்த ரயிலில் என்ன காட்சிகள் அரங்கேறுகிறது என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி வருகிறது  ”சிக்கிக்கு சிக்கிக்கிச்சு”. படம் பார்ப்பவர்களுக்கு இரண்டு மணி நேரம் ஒரு ரயிலில் பயணம் செய்த உணர்வு ஏற்படும்.

இன்னொரு  முக்கிய தகவல் இதில் விஜய டி. ராஜேந்தர் அவர்கள் ஒரு பாட்டு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஸ்டாரோ மாரோ கிறுகிறுங்குது

மோட்டோ சியாரோ முறுமுறுக்குது”

கைய வீசி டாட்டா  காட்டி

சும்மா போலாமா..”

என்ற குத்து பாடலை பாடியுள்ளார். விஜய் பெஞ்சமின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு என்.எஸ்.ராஜேஷ்குமார் செய்துள்ளார். கலை ஜான் பிரிட்டோ. படத்தொகுப்பு கெவின் செய்ய, N.Y. சபரிஷ் வினோத் தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.