முருகதாஸ் பாராட்டிய ராஜா ராணி இசை மற்றும் ட்ரைலர்!!

raja

பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் முருகதாஸ் தயாரிக்கும் படம் ‘ராஜா ராணி’. இத்திரைப்படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்தார் இயக்குநர் முருகதாஸ். ட்ரைலரை பார்த்து விட்டு இயக்குனர் அட்லீயை வெகுவாக பாராட்டியுள்ளார் முருகதாஸ்.

இது குறித்து அவர் கூறும்போது, “படத்தின் வெள்ளோட்டம் வெளியிடப்படும் நாளுக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். நான் பல முறைப் பார்த்து விட்டாலும் ரசிகர்களின் அபிப்ராயத்தை அறிந்துக் கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். சொன்ன கதையை அப்படியே படமாக்குவதும், அதை முறையாக ரசிகர்களைக் குழப்பாமல் ட்ரைலர் உருவாக்குவதும் ஒரு நல்ல இயக்குனரின் அடையாளம்.

அந்த முறையில் அட்லீயின் திறமை தெளிவாக தெரிகிறது. இவரை அறிமுகப்படுதுவதிலும், இந்த படத்தை தயாரிப்பதிலும் எனக்கு ரொம்ப பெருமை,” என்றார் முருகதாஸ்.

ராஜா ராணி திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 23ஆம் தேதி விமரிசையாக நடக்கிறது. செப்டம்பர் இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.