சிறுத்தை சிவா படத்திற்கு பின் நடிக்கும் புதுப்படம்!

vidharth

விதார்த் ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காசி, அற்புதத் தீவு, என் மன வானில் உள்ளிட்ட படங்களில் வினையனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சஜின்வர்கீஸ் இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

இதுகுறித்து சஜின் வர்கீஸ் கூறுகையில், “இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத புதுமையான கதையமைப்பு கொண்ட படமாகவும், அனைவராலும் பேசப்படக் கூடிய படமாகவும் இந்த படம் இருக்கும். அனைத்து தரப்பு மக்களுடைய மனநிலையை பிரதிபலிக்கின்ற படமாகவும் இப்படம் இருக்கும்” என்றார்.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளரான முரளிராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஷிகாஜூதின் இந்த படத்தை தயாரிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. விதார்த் தற்போது அஜித், சிறுத்தை சிவா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.