The Wolverine 3D – விமர்சனம்!

DF-11347

Chris clarement மற்றும் Frank miller ஆகியோரின் இணைந்த கைவண்ணத்தில் வெளிவந்த மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரம் தான் Wolverine. Hugh Jackman ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற எக்ஸ்-மென் தொடர் படங்களின் வரிசையில் ஆறாவது படமாக வெளிவந்திருக்கிறது The Wolverine. கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்கள் செலவில் 3டி படமாக வெளிவந்துள்ளது The Wolverine.

படத்தின் கதை X-men The Last Stand படத்தின் சம்பவங்கள் நடந்த பிறகு சில காலத்திற்குப் பின்னர் துவங்குகிறது. பழைய நினைவுகளை முழுவதுமாக மறக்க முயலும் ஒரு மனநிலையில் ஜப்பானுக்கு செல்லும் Hugh Jackman ஒரு டீமுடன் மோத நேருகிறது. அப்போது அதில் சம்பந்தப்பட்ட ஒரு பெண்ணிடம் Hugh Jackman  மனதைப் பறி கொடுக்கிறார். இது அந்தப் பெண்ணின் தந்தைக்கு தெரிய வர, Hugh Jackman-ஐ ஒழித்துக் கட்ட ஒரு ஆளை நியமிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

Hugh Jackman-ன் அபாரமான நடிப்பும், ஆக்ஷன் காட்சிகளும் படத்தை தூக்கி பிடிக்கின்றன. புல்லட் ரயில் மீது Hugh Jackman வில்லன் ஒருவனுடன் சண்டை போடும் காட்சிகளில் நம்மை சீட் நுனிக்கே வரவைத்து விடுகிறார். இது போன்று பிரமிக்க வைக்கும் காட்சிகள் நிறைய. தன் இதயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பூச்சியை எடுப்பதற்காக உடம்பை தன் கைகளாலேயே கிழித்து அந்த வண்டை எடுக்கும் காட்சி, உண்மையிலேயே ரொம்ப த்ரில்லான காட்சி.

கலக்கலான அறிமுக காட்சியிலும், குண்டுவெடிப்பு காட்சியிலும் Hugh Jackman சபாஷ் போடா வைக்கிறார் Hugh Jackman. இவருக்கு ஜோடியாக வரும் Tao Okamoto செம க்யூட். ரொம்பவே ரசிக்க வைக்கிறார். Hugh Jackman ஐ ஒழித்துக் கட்டும் Samurai வீரனாக வருகிறார் Will Yun Lee வருகிறார். அவரும் அசத்துகிறார்.

படம் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் எக்ஸ்-மென் : Days of Future past பாகத்தின் டீசரை இணைத்து இப்போதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் இயக்குனர்.