பிறந்தநாளை கொண்டாட லண்டன் பறந்த தனுஷ் & கோ!

tumblr_me7q7a86yG1qikj2so1_500

நாளை தனுஷுக்கு 30வயது. இந்த பிறந்தநாளைக் கொண்டாட தனது நெருங்கிய நண்பர்களுடன் லண்டன் பறந்து விட்டார்.

தனுஷுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது 2013. அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்று, ரூ 100 கோடியை அள்ளியது. மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக 2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். மரியான் படத்தில், அவர் நடிப்புக்கு ஏக பாராட்டுகள். எனவே மிக சந்தோஷமாக இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார்.

தனுஷுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பே பறந்து விட்டனர். இசையமைப்பாளர் அனிருத் வணக்கம் சென்னை படத்தின் இசை வெளியீட்டை முடித்து விட்டு இன்று மாலை கிளம்பினார்.