பற்றி எரியும் முர்ஷிதாபாத்: தேநீர் அருந்தும் யூசுப் பதான்!

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு எதிராக வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக வெடித்துள்ள வன்முறைகள் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத்தில் கலவரம் உச்சத்தை எட்டி இருக்கிறது.

இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் இந்த மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வன்முறை தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறைகளில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், மத்திய பாதுகாப்புப் படைகள் மீது கல் வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முர்ஷிதாபாத்தை அடுத்த பகுதிகளுக்குச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான், இன்ஸ்டாகிராமில் “அழகான மாலை, அமைதியான சூழல், ஒரு சிறந்த தேநீர்” என பதிவிட்டதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றார். பகிரங்க வன்முறைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு துணையாக இருக்க வேண்டிய அவரது நிலைபாடு குற்றம்சாட்டப்படுகிறது. “உங்களுக்கு வெட்கமாது இல்லையா?” என நெட்டிசன்கள் அவரது பதிவுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையை அரசியல் ஆய்வாளர்களும் கட்சிகள் பலவகையாக எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக பாஜக, “மேற்குவங்கம் பற்றி எரிகிறது, மம்தா பானர்ஜி அரசு அமைதியாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது” எனக் குற்றம் சுமத்தியுள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, “இந்து மக்கள் தாக்கப்படும் நேரத்தில், யூசுப் பதான் தேநீர் அருந்தி நிம்மதியில் இருக்கிறார். இதுதான் திரிணாமுல்” என எக்ஸ் தளத்தில் விமர்சனம் பதிவு செய்துள்ளார். இதனால் முர்ஷிதாபாத் கலவரம் விவகாரம் மேலும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response