பெண் உளவுத்துறை அதிகாரி மர்மமான முறையில் மரணம்!

திருவனந்தபுரம் சக்கா பகுதியில் ரயில்வே பாதையில் 24 வயதான உளவுத்துறை (IB) அதிகாரி மேகா மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

பாதனம்திட்டாவை சேர்ந்த மேகா, கடந்த ஒரு ஆண்டாக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த இரவு ஷிப்ட்டில் பணியாற்றிய அவர், காலையில் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

பேட்டா மற்றும் சக்கா ரயில் நிலையங்களுக்கு இடையில் மேகாவின் சடலம் காணப்பட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேகா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ள நிலையில், தற்கொலை என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரணத்தின் சரியான காரணம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Leave a Response