தவெகவில் பி.ஆர் வேலை பார்ப்பதற்காக தான் ஆதவ் அர்ஜுனா விசிக விலிருந்து விலகினாரா?

ஆதவ் அர்ஜுனா சரியான திட்டதுடன் தான் வி சி க கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நெருப்பை கொளுத்திப்போட்டதில் இருந்தே திருமாவுடன் ஆதவுக்கு முரண் தொடங்கியது. சொல்ல சொல்ல கேட்காமல் திமுகவை விமர்சிப்பது, அடிமட்ட தொண்டர்களை தன்பக்கம் வைத்துக்கொண்டு உள்கட்சி பூசலில் ஈடுபடுவது என அவ்வப்போது சில பிரச்சனைகளை உருவாக்கி வந்தார்.

இதனிடையே பெரிய பூகம்பமாக புத்தக வெளியீட்டு விழாவில் விஜயை பங்கேற்க வைத்தது அங்கு வேங்கைவயல் சாதிக்கொடுமையை வெளிக்கொண்டுவந்தவர்களை அழைத்து வந்து கௌரவப்படுத்தியது என அனைத்திலும் ஆதவின் கைவண்ணம் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கு மறைமுகமாக ஆதவ் பி ஆர் வேலைகளை தற்போதே தொடங்கிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.
வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்காக பணியாற்ற தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்தது. அதே நேரத்தில் சமீபத்தில் ஒரு வார இதழில் விஜய் கட்சி பற்றி நேர்மறையான ஒரு கணக்கெடுப்பு வெளியானது. இதனையும் ஆதவ் அர்ஜூனாவே வர வைத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Response