எஜமான் விஜய் ஓட்டு கேட்கவாவது வெளியே வருவாரா? – சாட்டை துரைமுருகன் காட்டம்!

பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஏரிகள் குளங்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை பனையூர் அடுத்த டிபி சத்திரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கியுள்ளார். அவர் புயலால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களை தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண உதவி வழங்கியுள்ளார்.

மக்கள் இடத்திற்கே சென்று நிவாரணம் அளித்திருந்தால் விஜயை பார்க்க கூட்டம் கூடியிருக்கும். பாதிக்கப்பட்டவர்களுடன் நேரம் அதிக நேரம் பேச இயலாது. அதனால்தான் விஜய் அவர்களை தனது அலுவலகத்திற்கு வர வைத்தார் என விஜய் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், ஓட்டு கேட்கவாவது வருவாரா? அதுவும் மக்கள் தான் பனையூர் போய் எஜமானை சந்திக்கணுமா? நல்லா இருக்கு உங்க மக்கள் அரசியல் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Response