இயக்குனர் ராசுமதுரவன் காலமானார்!

Rasu Madhuravan at Pandi Oliperukki Nilayam Movie Audio Launch Stills

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பூமகள் ஊர்வலம் படத்தின் மூலம்  இயக்குனராகி, பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் ஆகிய  படங்களை இயக்கிய இயக்குனர் ராசு மதுரவன்  இன்று காலை 10.30 மணியளவில் காலமானார். அவருக்கு பவானி  என்ற மனைவியும் நேசிகா (வயது 5) மற்றும் அனீஷ்கா (வயது 3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராசு மதுரவன் தற்பொழுது இயக்கிய சொகுசு பேருந்து திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. அவரது உடல் நிலக்கோட்டைக்கு அருகில் உள்ள அணைப்பட்டி என்ற அவரது சொந்த ஊரில் 10-07-2013 அன்று அடக்கம் செயயப்படவிருக்கிறது. இன்று அவரது உடல் ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலஷ்மி நகர் 25வது தெருவில்  உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.

ராசுமதுரவன் உடலுக்கு தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், சுரேஷ் சௌத்ரி, காஜா மொய்தின், சிவராஜ், செந்தில்குமார், பாபுராஜா, ஜோ, பங்கஜ் மேத்தா, எ.சி.ஆனந்தன்  மற்றும் இயக்குனர்கள் விக்ரமன், எழில், பாலா, வீ.சேகர், சக்தி சிதம்பரம், தருண்கோபி, ரவிமரியா, ஜனநாதன், ஆர்.கே.செல்வமணி, ஜெகன்நாத், சுப்ரமணிய சிவா, நந்தா பெரியசாமி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, சரவண சுப்பையா, பாலாஜி சக்திவேல், வீ.வீ.கதிர், சண்முக சுந்தரம், செல்வபாரதி, சூரியப்பிரகாஸ், உதய் பாணு மகேஷ்வரன், வேல்முருகன், ப்ரித்வி ராஜ்குமார், சிபி மற்றும் பெப்சி விஜயன், நடிகர் சபரீஷ், எம்.எஸ்.பாஸ்கர், யுவன், கொட்டாச்சி, முத்துக்களை, ப்ளாக் பாண்டி, வையாபுரி, நடராஜ், விச்சு, ராமகிருஷ்ணன், இளவரசு, பாடலாசிரியர் சினேகன், வேல்முருகன், கலை இயக்குனர் வீரசமர், எடிட்டர் சுரேஷ் அர்ஸ், ஸ்டன்ட் சுப்ரீம் சுந்தர், ஒளிப்பதிவாளர்கள் டி.ஷங்கர், தனபால், U.K.செந்தில்குமார், மௌனம் ரவி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.