முதன்மை பெருமா முதல்வரின் தமிழ் புதல்வன் திட்டம்.?

புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’ மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது

அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

யாருக்கு வழங்கப்படுகிறது?:

அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா கடந்த வருடம் நடந்து, கிட்டத்தட்ட 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு பணம்: இந்த நிலையில்தான் புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

கலைஞர் கனவு இல்லம்” திட்டத்திற்கும், இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்: அரசு பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்கள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை.

நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘தமிழ் புதல்வன் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா விரைவில் நடத்தப்பட உள்ளது.

விரிவாக்கம்: அதேபோல் காலை உணவு திட்டமும் விரிவாக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் பயிலும் 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Leave a Response