திரை பண்பாடு ஆய்வகம்
இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் “நாம்” அறக்கட்டளையின் சார்பாக திரை – பண்பாடு ஆய்வகத்தை துவக்கியுள்ளனர்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு
நுழைவு தேர்வு வைத்து அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா ?
தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் .
இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி S தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து, இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது ‘V Creations நிறுவனத்தில்’ படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார் .
“நாம்” அறக்கட்டளையை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன், வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் ஃபாதர் ராஜா நாயகம் ( லயோலா கல்லூரி ) அவர்களும் உடன் இருந்தார்கள் .