அனிமேஷனில் வெளியாகும் கிரைம் ஸ்டோரி – Despicable Me 2!

DM2_Agnes_004

இந்தியாவில் எப்போதுமே ஹாலிவுட் அனிமேஷன் படங்களுக்கு வரவேற்பு அதிகம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதற்கு ரசிகர்களாக உள்ளனர். இதனாலேயே ஆக்ஷன் அட்வென்ச்சர் படங்களை போல அனிமேஷன் படங்களிலும் பல பாகங்களை ஹாலிவுட் பட நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. ஐஸ் ஏஜ், மடகாஸ்கர் என இப்போது இந்த வரிசையில் Despicable Me 2 படமும் இணைகிறது.

யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் 2010ஆம் ஆண்டு தயாரித்த Despicable Me Part-I, 540 மில்லியன் டாலர் வசூல் செய்தது. இப்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது.

Sergio Pablos, Cinco Paul மற்றும் Ken dario ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். முதல் பாகத்தில் வில்லனாக காட்டப்பட்ட Gru என்ற கதாபத்திரம் தான் இந்த கதையின் அடித்தளம். இந்த பாகத்தில் மேலும் சில குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் சாகசங்களை செய்கிறார்.

இதில் அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் வேறு. மூன்று மகள்களில் மூத்த மகளுக்கு பொறுப்போடு, சில பருவகால ஆசைகளும் உண்டு. இரண்டாவது மகளுக்கு அப்பாவின் சில வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள ஆசை. மூன்றாவது மகள் கடைக்குட்டி.

ரகசிய காவல்துறை நிறுவனம், Edwardo என்ற சூப்பர் வில்லனை பிடிப்பதற்காக, Lucy என்ற பெண்ணோடு சேர்ந்து வேலை செய்ய Gru-வை பணிக்கிறது. பெண் குழந்தைகளை கவனிப்பது, தனது வேலைகளை கவனிப்பது என Gru-விற்கு நிறைய பொறுப்புகள். இதனை எப்படி செய்து முடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள். இதனை ஜூலை 5ல் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.