Despicable Me 2 – விமர்சனம்!

Despicable-Me-2-Agnes-Poster

இந்தியாவில் எப்போதுமே ஹாலிவுட் அனிமேஷன் படங்களுக்கு வரவேற்பு அதிகம். 2010ஆம் ஆண்டு யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த Despicable Me படத்தின் இரண்டாவது பாகம் Despicable Me 2 என்ற பெயரில் 3D-யில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் வில்லனாக காட்டப்பட்ட Gru தான் இந்த கதையின் ஆணிவேர்.

தன சுயநலத்துக்காக தத்தெடுத்த மூன்று குழந்தைகளையும் பிரிய மனமில்லாமல், தன்னுடனே வைத்துகொள்ளும் GRU இந்த பாகத்தில் குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ரகசிய காவல்துறை நிறுவனம், Edwardo என்ற சூப்பர் வில்லனை பிடிப்பதற்காக, Lucy என்ற பெண்ணோடு சேர்ந்து வேலை செய்ய Gru-வை பணிக்கிறது. முதலில் விருப்பமில்லாமல் நிராகரிக்கும் Gru பின்னர் மகள்களுக்காக சேர்ந்து கொள்கிறார்.

மூன்று மகள்களில் மூத்த மகளுக்கு சில பருவகால ஆசைகள் ஏற்படுகிறது. வேலை பார்த்துக்கொண்டே அவளை கண்காணிக்கிறார் Gru. இரண்டாவது மகளுக்கு அப்பாவின் சில வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள ஆசை. மூன்றாவது மகள் கடைக்குட்டி. எப்போதும் சந்தோஷமாக இருப்பவள்.

குழந்தைகளை கவனிப்பது, தனது வேலைகளை கவனிப்பது என Gru-விற்கு நிறைய பொறுப்புகள். இதனை எப்படி செய்து முடிக்கிறார் என்பதை காமெடி, செண்டிமெண்ட் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் விதத்தில் தந்துள்ளனர் இயக்குனர்கள் Pierre Coffin மற்றும் Chris Renaud.

வின் ஒவ்வொரு அசைவுகளும், முகபாவனைகளும் ரசிக்க வைக்கின்றன. மகள் ஒரு பையனுடன் சுற்றும்போதும், குழந்தைகளைகளோடு விளையாடும்போதும்  காட்சிக்கு ஏற்றவாறு ரசிக்க வைக்கிறார். இளைய மகள் ஏக்னேஸ் வெரி கியூட். அப்பாவிடம் ஒவ்வொரு முறை விளக்கம் கேட்கும் போதும், கொடுக்கும் ரியாக்ஷனும் அழகு.

Gru-வை பிரியும்போது காதலை தெரிந்து கொள்ளும் Lucy, பின் திருமணத்தில் முடிக்கிறார். ஒவ்வொரு Minions-ம் சிரிக்க வைக்கின்றன. முடிவில் ஆடிஷனில் மூன்று Minions பங்கு பெறுவது நல்ல காமெடி.

Miranda Cosgrove, Sergio Pablos, Cinco Paul மற்றும் Ken dario ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். படத்தின் ஹைலைட் அனிமேஷன், கிராபிக்ஸ் தான்.ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார்கள். குழந்தைகளோடு தியேட்டருக்கு சென்று பார்க்ககூடிய ஒரு பொழுதுபோக்கு படம் தான் இந்த Despicable Me 2.