முத்தமே இல்லாமல் உருவான காதல் படம்!

Theriyama Unna Kadhalichiten Audio Launch

டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் வசந்தின் தம்பி, வினோத்குமார் தயாரித்துள்ள படம் “தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்”. மதில் மேல் பூனை படத்திற்கு பின் விஜய் வசந்த் நடித்துள்ள இப்படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக புதுமுகம் ரஸ்னா நடித்துள்ளார். மயில்சாமி, பாண்டு மற்றும் நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

புதுமுக இயக்குனர் ராமு இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீநாத் இசையமைத்துள்ளார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய இயக்குனர் ராமு, “படத்தில் விஜய் வசந்தின் பெயர் கார்த்திக். தெரிந்தோ, தெரியாமலோ இந்த பெயரை வைக்கவில்லை. நவரச நாயகன் கார்த்திக் போல விஜய் வசந்த் வருவார், அதற்கேற்ற நடிப்பும், நவரசமும் அவரிடத்தில் உள்ளது. இது ஒரு கண்ணியமான காதல் படம். காதலின் எல்லையை மீறாமல் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. நாயகன், நாயகியும் தொட்டு கொள்ளவில்லை, முத்தம் கொடுக்கவில்லை. குடும்பத்தோடு பார்க்கும் வகையில் காமெடி கலந்து உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

பின்னர் பேசிய விஜய் வசந்த், “போன பிரஸ்மீட்டில் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லி ஹீரோயின் மாட்டிவிட்டாங்க. இப்போ டைரக்டர் ராமு, கார்த்திக்னு சொல்லி மாட்டிவிட்டுட்டார். நான் யாராவும் இல்லை. நான் விஜய் மாதிரி இருந்தால் அதுவே எனக்கு போதும் என்றார்.