இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – முதல்வர் பழனிசாமி..

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அரசு கொரோனாவால் இறந்தவர்கள் பட்டியலை உடனடியாக வெளியிடுவதில்லை என்றும், இறந்து ஐந்து நாட்கள் கழித்தே அவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதாகவும், உடனடி இறப்பு எண்ணிக்கைகளை அறிவிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு இறப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘கொரோனா இறப்பு எண்ணிக்கையில் அரசு எதையும் மறைக்கவில்லை, மறைக்கவும் முடியாது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கொரோனா உயிரிழப்பு விவரங்கள் வெளியிடப்படுகின்றன. உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன லாபம்?’ என கூறியுள்ளார்.

மேலும் ‘தமிழகத்தில் கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. வேறு நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தவர்களின் இறப்பு எண்ணிக்கையால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response