கவிஞருக்கு தோள் கொடுத்த நாயகர்கள்

தலைப்பை பார்த்தவுடன் யார் அந்த கவிஞர்னு யோசிக்கிறீங்களா? விஷயம் என்னன்னா, கவிஞர் ப.விஜய் ஒரு படத்தை இயக்கப்போகிறார். அதற்கு உறுதுணையாக ஆக்ஷன் கிங் அர்ஜுனும், ஜீவாவும் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

‘மக்கள் அரசன் பிக்சர்ஸ்’ சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. சு.ராஜா தயாரிக்கும் முன்றாவது படம் இது.

இன்று (மே 15) பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் சினிமா பெப்சி தொழிலாளர்களுக்காக 5kg அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 kgs) இன்று வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் நேர்த்தியான கதையுடன் சமூக கருத்தையும் பதிவிடும் பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார்.

ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் “ஆக்சன் கிங்” அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.

நகைச்சுவை பங்கிற்கு சாரா, ‘கைதி’ படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் இந்த்ரஜா சங்கர் இவர்களோடு ராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படும் தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குனர் பா.விஜய் கூறியுள்ளார்.

இப்போது தலைப்பு புரிகிறதா? கவிஞருக்கு தோள் கொடுத்த நாயகர்கள் அர்ஜுனும், ஜீவாவும் தான்.

Leave a Response