தந்தூரி இட்லி! இது என்ன புதிய வகையான அயிட்டமா இருக்கு!!

செய்தியின் தலைப்பை பார்த்தவுடன், எங்கடா கிடைக்குது இந்த புதிய வகையான உணவு என்று யோசிக்கிறீர்களா!! அட…’தந்தூரி இட்லி’ என்பது புதுமையான நகைச்சுவை கலந்த காதல் தொடர். இந்த தொடர் தொலைக்காட்சியில் இல்லை, எம்.எக்ஸ்.பிளேயர் என்னும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பெரும்பாலான இணையதளங்களில் வெளியாகும் படங்களை காண நாம் அந்த குறிப்பிட்ட தளத்திற்கு பணம் கட்டித்தான் படம் பார்க்க முடியும். ஆனால் இந்த எம்.எக்ஸ்.பிளேயர் இணையதளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் அனைத்தும் முற்றிலும் இலவசம்.

வடக்கும் தெற்கும் எதிரெதிர் துருவங்கள் என்றாலும், அருகாமையில் வந்தால் என்ன நடக்கும் என்பது ஒரு சுவையான கற்பனை. ஒரு வட இந்தியப் பெண், சென்னையில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திற்கு பணிக்கு வருகிறார். தென் இந்திய அலுவலக நடைமுறைகள் அந்தப் பெண்ணை எந்தெந்த விதத்தில் பாதிக்கிறது என்பதை விளக்குவதுதான் தந்தூரி இட்லி.
முன்னணியில் இருக்கும் பொழுதுபோக்கு ஒளிபரப்பு தளமான எம்.எக்ஸ்.பிளேயர், சாதாரணமான ஒரு கதையை அசாதாரணமான முறையில் சுவைபட வழங்குகிறது. நகைச்சுவை கலந்த இந்த காதல் கதையை தேவன்ஷு ஆர்யா இயக்கியிருக்கிறார்.

தந்தூரி இட்லி தொடரில் சிம்ரன் என்ற வட இந்தியப் பெண் வேடத்தில் நடித்திருக்கும் அவந்திகா மிஷ்ரா கூறுவதாவது, “இந்தத் தொடரின் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்து அனுபவித்து நடித்தேன். குறிப்பாக இந்தத் தொடரின் தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதற்கு காரணம் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி தொடரைப் பார்க்க ஈர்க்கும் தலைப்பு இது. டில்லியிலிருந்து பணி நிமித்தமாக சென்னை வரும் சிம்ரன் என்ற பெண் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். தற்போதுள்ள இறுக்கமான சூழ்நிலையில் மக்களுக்கு மன நிறைவைத் தரும் பொழுதுபோக்கு தேவை. இதை தந்தூரி இட்லி சரியாகப் பூர்த்தி செய்யும்.” என அவந்திகா மிஷ்ரா தெரிவித்தார்.

சிம்ரன் மீது காதல் வசப்படும் செல்வம் என்ற சென்னை இளைஞன் வேடத்தில் நடித்திருக்கும் அஜய் பிரசாத் கூறியதாவது, “தந்தூரி இட்லி நகைச்சுவைத் தொடர், முழுமையாக ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் முழ்கச் செய்யும்.” என அஜய் பிரசாத் தெரிவித்தார்.

ஆறு பகுதிகளைக் கொண்ட இந்த மென் தொடரை இயக்கியிருக்கும் தேவன்ஷு ஆர்யா கூறியதாவது, “சினிமா மற்றும் தொலைக்காட்சியில் சொல்ல முடியாத வித்தியாசமான கதைகளை ஆக்கப்பூர்வமான சுதந்திரத்துடன் சொல்ல இடமளிப்பவைதான் இணைய தொடர்கள். இந்தத் தொடரில் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கும் இனிய அனுபவமாக எங்களுக்கு அமைந்தது. அதேபோல், பார்வையாளர்களுக்கும் இது மகிழ்சியான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.” என இயக்குநர் தேவன்ஷு ஆர்யா தெரிவித்தார்.

அஜய் பிரசாத், அவந்திகா மிஸ்ரா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இத்தொடரில் விகால்ஸ் விக்ரம், வினோத் குமார், வாட்ஸப் மணி, சுஹாசினி சஞ்சீவ் மற்றும் மிர்ச்சி சபா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

எம்.எக்ஸ் பிளேயர்
அப்ளிகேஷனை கீழே உள்ள இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்:
Download the App Now
Web: https://www.mxplayer.in/

Leave a Response