FEFSI உறுப்பினர்களுக்கு நிவாரணம் சரியாக வழங்கப்படுகிறதா? – பொருளாளர் சுவாமிநாதன் பேட்டி…

தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் மிக கொடூரமான சம்பவம் கோவிட் 19 என்னும் நாவல் கொரோனா வைரஸ். இதன் தாகமாக உலக முழுக்க பல லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆயிரம் கணணக்கானோர் மரணமடைந்து, பல்லாயிரம் பேர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கொரோனா நோய் உலக வர்த்தகத்தையே பின்தள்ளியுள்ளது. உலகம் முழுக்க அனைத்து தொழிலும் முடக்கப்பட்டுள்ளுதது, ஆங்காங்கே ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இனிதியாவிலும் அனைத்து தொழில்களும் பாதிப்புக்களாகி முடங்கியுள்ளது.

இந்த ஊரடங்கு நேரத்தில் சினிமா துறையும் விதிவிலக்கில்லாமல் முடங்கியுள்ளது. தமிழ் சினிமா முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 18000 திரைத்துறை ஊழியராலும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள திரைத்துறை ஊழியர்களின் நலன் கருதி சில நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என திரைத்துறையை சார்ந்தவர்கள் அவர்களால் இயன்ற உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்களாகவும், சிலர் பணமாகவும் திரைத்துறை சங்கங்களுக்கு தனிப்பட்டமுறையில், FEFSI என்னும் தென்னிந்தியா திரைப்பட ஊழியர்கள் சம்மேளனம் மூலமாகவும் உதவி செய்துள்ளனர். திரைத்துறையினக்கு உதவி செய்தவர்கள் என்ற வரிசையில் நடிகர்கள் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, கார்த்தி, சிவகுமார் குடும்பத்தினர், பார்வதி நாயர், இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், ஏ.ஜி.எஸ்.நிறுவனம் மட்டுமின்றி வேறு சில நடிகர்கள் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் உதவி செய்த்து வருகின்றனர்.

FEFSI’க்கு பலர் உதவி செய்து வருவதால், அந்த உதவிகள் எவ்வாறு சினிமா துறை ஊழியர்களுக்கு பகிரப்படுகிறது என்பதை பற்றி அறிய FEFSI’யின் பொருளாளர் சுவாமிநாதன் அவர்களை தொடர்புக்கொண்டு கேட்டோம்.

“கேள்வி: இதுவரை FEFSI’க்கு கொரோனா நிவாரணத்திற்கான நிதியுதவி எவ்வளவு வந்துள்ளது?

பதில்: தற்போது கரெக்ட்டாக சொல்லமுடியாது. ராகவா லாரன்ஸ் முதலில் 50 லட்சம் என்று சொன்னார், பிறகு 25 லட்சம் தான் செக் கொடுத்தார், உதவி செய்யும் விஷயம் வெளியில் தெரியக்கூடாது என கூறினார். அடுத்த நாள் 50 லட்சம் உதவி செய்யப்போவதாக அறிவித்தார், அந்த செக் இன்னும் வரவில்லை. பண உதவி செய்த பல பேருடைய செக் வங்கியில் போடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நமக்கு தெரியாமல் சிலர் அவர்களால் முடிந்த 5000, 2000, 1000 என நம்முடைய FEFSI வாங்கி கணக்கில் போட்டு வருகிறார்கள். மொத்த பணம் பெற பெற்ற பிறகு தான் நாம் சரியாக சொல்ல முடியும். பணம் வர…வர நாங்கள் 2000 மூட்டை அரிசி ஆர்டர் செயகிறோம், பணம் 10 லட்சம் எடுக்கிறோம் இப்படியே போய் கொண்டிருக்கிறது.

முதலில் எவ்வளவு ஆகும் என்று யாருக்கும் தெரியாது, அதனால் கஷ்டப்படுபவர்களுக்கு முதலில் அரிசி கொடுத்துவிடலாம் என ஆரம்பிச்சோம், பிறகு 2000 மூட்டை 5000 மூட்டை என அரிசிக்கு ஆர்டர் செய்து அது வரவர மற்ற உறுப்பினர்களுக்கு கொடுத்து வருகிறோம்.

கேள்வி: தற்போது நிலவிவரும் கொரோனா பிரச்சனை ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் போல் தகவல்கள் சொல்கின்றன. அதுவரை உங்களுடைய ஊழியர்களுக்கு உதவி செய்ய உங்களிடம் போதுமான பணம் உள்ளதா?

பதில்: இல்லை சார், அதுவரை பண்டு எப்படி இருக்கும். இதுவரை 15000 மூட்டை அரிசி வங்கியுள்ளோம், 2000 மூட்டைகள் வரை ஸ்பான்சர் கிடைக்கப்பெற்றது. இதில் சின்ன யூனியங்களுக்கு சுமார் 90 சதவிகிதம் வரை நிவாரணம் கொடுத்து விட்டோம். பெரிய யூனியனில் உள்ளவர்கள் நிறைய பேர் நிவாரண உதவி வாங்கமாட்டார்கள், 60 சதவிகிதம் பேர் தான் வந்து வாங்குகிறார்கள். இயக்குனர்கள் யூனியனில் 60 – 70 சதவிகிதம் பேர் தான் நிவாரண உதவியை வாங்குகிறார்கள்.

கேள்வி: உறுப்பினர்களுக்கு பண உதவி ஏதாவது FEFSI முலமாக செய்யப்படுகிறதா?

பதில்: ஆமாம், ஒவ்வொரு உறுப்பினருக்கும் 25 கிலோ அரிசி மூட்டை ஒன்றும் , 500 ருபாய் பணமும் கொடுக்கிறோம். தற்போது ஆரணி, பொன்னேரியில் இருந்து அரிசியை வாங்குகிறோம். பணத்தை ஆன்லைனில் அனுப்பினால், அரிசியை அவர்கள் அனுப்பி வைகிறார்கள். இன்று ஒரு 2000 மூட்டை அரிசி வாங்குறோம், அதற்க்கு சுமார் 19 லட்சம் ருபாய் ஆகிறது. இந்த பணத்தை நாங்கள் வங்கியிலிருந்து தான் எடுக்க வேண்டும். 15000 உறுப்பினர்களுக்கு அரிசி வாங்குவதற்க்கே 1.5 கோடி ருபாய் செலவாகிறது, இந்த அரிசியின் விலை 900, 1000, 1100 என இருக்கிறது. 15000 உறுப்பினர்களுக்கு 500 ருபாய் வீதம் பணம் கொடுத்தால் அதுவே 75 லட்சம் ரூபாய் ஆகிவிடுகிறது. இதுவரை சுமார் 2.25 கோடி ருபாய் செலவாகியுள்ளது. நம்முடைய சங்க உறுப்பினர்களை தவிர்த்து ஜிம் பாய்ஸ், சின்னத்திரை சங்கம் என 250 மூட்டை அரிசி நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.” என நம்முடைய கேள்விகளுக்கு FEFSI பொருளாளர் சுவாமிநாதன் பதிலளித்தார்.

FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி தன்னுடைய அறிக்கையில் 18000 உறுப்பினர்கள் உள்ளதாக சொல்கிறார், ஆனால் பொருளாளர் சுவாமிநாதனோ 15000 உறுப்பினர்கள் என குறிப்பிடுகிறார். அதை போலவே, சுவாமிநாதன் அவர்கள் நம்மிடம் பேசும்போது பெரிய யூனியன்களில் 60 சதவிகிதம் பேர் தான் நிவாரண உதவி பெறுகிறார்கள் என குறிப்பிடுகிறார். ஆனால் சுவாமிநாதன் கணக்கு சொல்லும் போது, அவர் குறிப்பிட்ட மொத்த 15000 உறுப்பினர்களுக்கான அரிசி மற்றும் பணத்தை கணக்கிட்டு தான் சொல்கிறார். இவர்களுக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் தெளிவு இல்லையா, அல்லது நம்மை குழப்புகிறார்களா அல்லது கணக்கு வழக்கில் ஏதாவது குளறுபடியா என்பது கொரோனா ஓய்ந்து சகஜ நிலைக்கு திரும்பியதும் ஆடிட்டர் கணக்கு பார்த்தால் தான் தெரியுமோ என்னமோ! மொத்தத்தில் சினிமா துறை உறுப்பினர்கள் பலன் அடைந்தால் சரி.

இந்த குளறுபடியை பற்றி FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கேட்கலாம் என்று பார்த்தால், அவர் நம்முடைய கைப்பேசி எண்களை பிளாக் செய்துள்ளார். செல்வமணியை பொறுத்தவரை அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டக்கூடிய செய்திகளை பதிவிட்டால், அவருக்கு பிடிக்காது போல! அவரை பற்றிய பாராட்டு செய்திகள் மட்டுமே தான் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ!! சமீபத்தில் அவர் போட்ட கொரோனா முகக்கவசம் வேஷத்தை சுட்டிக்காட்டி ஒரு மீம்ஸ் போட்டது தான் அவர் எங்களுடைய கைப்பேசி எண்களை பிளாக் செய்ய காரணம்.

Leave a Response