மறைந்த நெல் ஜெயராமன் பிறந்தநாள் விழாவில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியுள்ள அரிசி…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆதிரெங்கம் என்னும் கிராமத்தில் 1964ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி பிறந்தவர் ‘நெல்’ ஜெயராமன். இவர் சுமார் 160 வகையான பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாத்து வந்தார். சில நாட்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நெல் ஜெயராமன், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி தன்னுடைய 54ம் வயத்தில் காலமானார்.

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆதிரெங்கம் கிராமத்தை சேர்ந்த பாரம்பரிய நெல் பாதுகாவலர் நெல் ஜெயராமன் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று திருத்துறைப்பூண்டி வீரன் நகரில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் ஆதிரெங்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருகிணைப்பாளர் ராஜீவ் கலந்து கொண்டார்.

நெல் ஜெயராமன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி வீரன் நகர் தெருவில் வசிக்கும் நரிகுறவர்கள் சமுதாய மக்களான சுமார் 100 குடும்பத்திற்க்கு பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் மற்றும் நெல் ஜெயராமன் மகளிர் சுய உதவிக்குழு சார்பகவும் உதவிகள் செய்யப்பட்டது. அந்த 100 குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும், எதிர்ப்பு சக்தி பெரிகிடவும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பாரம்பரிய ‘இலுப்பை பூ சம்பா’ அரிசி மற்றும் இயற்கை காய்கறிகளை ஆதிரெங்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருகிணைப்பாளர் ராஜீவ் கலந்து கொண்டு வழங்கினார்.

இந்த நிகழ்வில் பாலம் செந்தில்குமார், நெல் ஜெயராமன் மகளிர் சுய உதவிக்குழு ‘மனக்காடு’ சித்திரா, தன்னார்வர்கள் மற்றும் மக்கள் பாதை அமைப்பினர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி கொரோனா பாதுகாப்பு ஒழுக்கத்துடன் முகக்கவசங்களை வழங்கியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Response