வேற்றுகிரகவாசியுடன் இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்

“அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது. தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய கனவு. ஹாலிவுட்டின் வெற்றி சரித்தரமாக விளங்கும் இந்த அறிவியல் புனைவு வகை படத்தை பிரமாண்டமாக தமிழில் தர தயாராகியுள்ளது “அயலான்” குழு. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சிறப்பாக 17.02.2020 அன்று “டாக்டர்” படக்குழு தங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் முன், அவர்களுக்கு அடுத்ததொரு இன்ப அதிர்ச்சியாக, “அயலான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது படக்குழு. வேற்றுகிரக வாசியுடன் வெளிவந்திருக்கும் “அயாலான்” ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

“அயலான்” படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. மொத்த படப்பிடிப்பும் முடிய இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. தமிழின் பிரமாண்டமான அறிவியல் புனைக்கதை (சயின்ஸ் ஃபிக்‌ஷன் ) படமாக இப்படம் உருவாகிறது. எனவே படத்தில் அதிக அளவிலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுதும் முன்னணி நாயகியாக வலம் வரும் ராகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். காமெடி ராஜாக்களாக வலம் வரும் கருணாகரன், யோகிபாபு ஆகிய இருவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடி செய்கிறார்கள். பாலிவுட்டில் மிக சிறந்த நடிகராக விளங்கும் சரத் கேல்கர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

24AM நிறுவனம் சார்பில் RD ராஜா தயாரிக்க KJR Studios நிறுவனர் கொட்டாப்படி J ராஜேஸ் இப்படத்தை வெளியிடுகிறார். பிரமாண்ட அறிவியல் புனைவு படமாக உருவாகும் “அயலான்”, அகாடமி அவார்ட் வின்னர் A. R. ரஹ்மான் சிவகார்த்திகேயனின் அறிமுகப்பாடலை பாடியுள்ளார். மாயஜால விஷ்வல்களை திரையில் கொண்டு வரும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

Leave a Response