தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…

இசைக்கு மயங்காத உள்ளம் ஏதேனும் இருக்கிறதா? என்றால் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்… அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும்.

அப்படிபட்ட இசை பிரியர்கள் காதுக்கு ஒரு இனிய செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்கியுள்ளது.

தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் லைவ் ரேடியோ சேவையை துவக்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சேவையை துவக்கி வைத்தார். இதற்காக அந்த குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், அவர்கள் கூறும் போது, ‘எங்கள் குழும தகுதிப்பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யூனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பற்பல விஷயங்களோடு, பல புதுவிதமான யுத்திகளோடு உங்களை நாள்தோறும் மகிழ்விக்க மற்றும் தங்களின் நிகழ்ச்சி திறன் மேம்பாட்டை நிரூபிக்க வருகிறார்கள்.’ என்று கூறினர்.

ரேடியோ ஜாக்கி மற்றும் அவர்கள் நிகழ்ச்சிக்கான பட்டியல் உங்களுக்காக:

1. ‘மனதின் நேரம்’ மற்றும் ‘வணக்கம் யு.எஸ்.ஏ’ நிகழ்ச்சியை ஆர்.ஜெ பொற்கோ தொகுத்து வழங்குவார்.
2. ‘ஜஸ்ட் ரிலாஸ் ப்ளீஸ்’ மற்றும் ‘டீ கடை பெஞ்ச்’ நிகழ்ச்சியை ஆர்.ஜெ ஷோபனா தொகுத்து வழங்குவார்.
3. ‘நமக்கு சோறு தான் முக்கியம்’ மற்றும் ‘கொஞ்சம் பண் நிறைய பாட்டு’ நிகழ்ச்சியை ஆர்.ஜெ சுந்தர் தொகுத்து வழங்குவார்.
4. ‘ஊர சுத்தலாம் வாங்க’ நிகழ்ச்சியை ஆர்.ஜெ ரிஷி தொகுத்து வழங்குவார்.
5. முக்கியஸ்தர்கள் பற்றிய கதையை ‘டெய்லி டைரி’ என்ற நிகழ்ச்சி மூலகிமாக ஆர்.ஜெ சதீஷ் தொகுத்து வழங்குவார்.
6. ‘சினிவுட்’ மற்றும் ‘பொலிட்டிகள் கார்னர்’ நிகழ்ச்சியை ஆர்.ஜெ தமிழ் தொகுத்து வழங்குவார்.
7. ‘வெட்டி நியாயம்’ மற்றும் ‘பொலிட்டிகள் கார்னர்’ நிகழ்ச்சியை ஆர்.ஜெ தென்றல் தொகுத்து வழங்குவார்.
8. ‘போடு தில்லேயே’ நிகழ்ச்சியை ஆர்.ஜெ ரமேஷ் தொகுத்து வழங்குவார்.
9. ஆர்.ஜெ அன்பரசி பின்னணி குரல் வழங்குவார்

இதன் ஒரு அங்கமாக மாற மற்றும் யூனிவர்செல் லைவ் ரேடியோவை www.universalradio.live என்ற இணையதள முகவரியில் காணலாம்.

Leave a Response