வடபழனியில் திரைப்படத்துறையினருக்கு அதிநவீன வசதிகளுடன் உருவாகியிருக்கும் ஒரு புதிய ஆடியோ ஸ்டூடியோ

உலக தரத்தில், அதிநவீன தொழிட்நுட்ப வசதிகளுடன், ஆடியோ சார்ந்த உங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உதயமாகி இருக்கிறது.

பிரத்யேகமாக ஆடியோ தரவரிசையில் முன்னணியில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் உபகரணங்களை நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, மிகச் சிறந்த முறையில் தரமான பதிவேற்றங்களை தரவல்ல ஒரு அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை வடிவமைத்திருக்கிறது.

சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, சர்வதேச ஆடியோ உபகரணங்கள் தரவரிசை பட்டியலில் உயரத்தில் இடம் பெற்றிருக்கும் ‘டைன்ஆடியோ’ நிறுவனத்தின் ‘கோர் சீரீஸ்’ இங்கு நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகச்சிறந்த ‘வார்னர் ஸ்டுடியோஸ்’, ‘பிபிசி லண்டன்’, மும்பையின் ‘யாஷ்ராஜ் ஸ்டுடியோஸ்’, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் ‘டைன் ஆடியோ’ உபகரணங்களை பயன்படுத்தி வருவதே அதன் தரத்திற்கு சான்றாக அமைகிறது.

இங்கு கதை, இசை குறித்தும் விவாதிப்பதற்கு வசதியேற்படுத்தி இருக்கிறார்கள்.

திரைப்படத்துறையினருக்கு அதிநவீன உபகரணங்களுடன், மிகவும் துல்லியமான ஒலிப்பதிவு, ஒலி வடிவமைப்பு மற்றும் பதிவேற்றத்திற்கான முழுமையான வசதிகளுடன் உதயமாகி இருக்கும் இந்நிறுவனம், ஒரு சிறிய பிரிவியூ தியேட்டராக, அனைத்து ஒலி, ஒளி உள்ளிட்ட அனைத்து விதமான தர பரிமாணங்களையும் கவனித்து, சரி செய்யத்தக்க வகையில் செயலாற்றவும் தயாராகி வருகிறது.

வடபழனியில் உலகதரத்தில் உருவாகியிருக்கும் ‘ஸ்டுடியோ யூனோ ரெக்கார்ட்ஸ்’ எனும் இந்த புதிய ஆடியோ ஸ்டுடியோ’ படைப்பாளிகளை அன்புடன் அழைக்கிறது.

Leave a Response